Monday , August 15 2022
Breaking News
Home / இந்தியா / புலம்பெயர் தொழிலார்களுக்காக புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…
Vsolve UK

புலம்பெயர் தொழிலார்களுக்காக புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பொதுமுடக்கத்தால் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்களின் திறனை அறிந்து பணி வழங்கும் வகையில் 50 ஆயிரம் கோடி மதிப்பில் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதிக புலம் பெயர் தொழிலாளர்களைக் கொண்ட மாவட்டங்களில் தொழிலாளர்களின் திறனுக்கு ஏற்ப கிணறு வெட்டுதல், பண்ணை கட்டுமானம், சாலை அமைத்தல் உள்ளிட்ட 25 வகையான வேலைகள் வழங்கப்பட உள்ளன.

Thanks To: News 18

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES