Sunday , August 14 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / ₹ 50 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்-ஊரடங்கை ரத்து செய்ய கோரிய வழக்கு..
Vsolve UK

₹ 50 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்-ஊரடங்கை ரத்து செய்ய கோரிய வழக்கு..

தமிழகத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இது தொடர்பாக சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பலர் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். தென் கொரியா, சுவீடன் போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே வைரஸ் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அது நம்முடன் தான் இருக்கும் என்பதால், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற அரசு நிபந்தனைகளை கடை பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த ஒரு முறையான திட்டமும் இல்லாமலேயே ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மத்திய மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இதே போன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், வழக்கு தொடர்ந்தவர் அரசியல் கட்சியை சேர்ந்தவரே தவிர விஞ்ஞானி அல்ல என்வும் தெரிவித்தனர். சுய விளம்பரத்திற்காகவே தொடரப்பட்ட இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.

Thanks to: news 18

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES