Tuesday , July 5 2022
Breaking News
Home / குறுகிய செய்திகள் / தமிழக முதல்வர் ஊரடங்கு தளர்வு பற்றி ஆலோசனை..!
Vsolve UK

தமிழக முதல்வர் ஊரடங்கு தளர்வு பற்றி ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், 27ம் தேதி, மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது. அப்போது, கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டாம் என்று, மருத்துவ நிபுணர் குழு அப்போது பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான்தான், நேற்று தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். நேற்றைய கூட்டத்தில், மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்தை துவங்க நிறைய கலெக்டர்கள் கோரிக்கைவிடுத்தனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து, அல்லது, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களிடையே மட்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்பது கோரிக்கை. இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று மறுபடியும், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் முதல்வர். அதில் இறுதியான முடிவு எடுக்கப்பட உள்ளது.

Source : Oneindia tamil

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

ஆப்பாடியான் பங்காளிகள் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசுகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளுக்கு…

87ஊர் ஆப்பாடியான் பங்காளிகள், மற்றும் மாமன், மைத்துனர்களின் குழந்தைகள் தற்போது நடந்த பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES