Wednesday , August 10 2022
Breaking News
Home / இந்தியா / இந்தியா-சீனா எல்லை பிரச்சனை- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!
Vsolve UK

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதிகளில் சீனா, தனது ராணுவத்தை குவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.

இதனை இரு நாடுகளிடமும் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, சீனாவுடனான எல்லை பிரச்னையை அமைதியாகத் தீர்க்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எல்லை விவகாரத்தில் இந்திய ராணுவம் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்வதாகவும், இந்திய இறையாண்மையை கட்டிக்காக்கும் வகையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இதனிடையே, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவுடனான இந்த விவகாரத்தால், பிரதமர் மோடி சந்தோஷ மனநிலையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அதிக மக்கள் தொகையையும், சக்திவாய்ந்த போராளிகளையும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், எல்லை பிரச்சனை விவகாரத்தில் இருநாடுகளும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES