Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
இதுவரை பாதிக்கப்பட்டோரில்
100இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது.
✅இது ஆறுதலான செய்தி✅✅
இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்கு
தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது
அந்த 6.33% இல்
2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது
0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது
தீவிர சிகிச்சை தேவைப்பட்ட 6.33% பேரில்
3.5% பேரை நாம் இழந்திருக்கிறோம்
❌இது துற்செய்தி❌❌
அதாவது மருத்துவமனையில் ஆக்சிஜன்/ வெண்ட்டிலேட்டர்/ ஐசியூ இந்த மூன்றில் ஏதாவது சிகிச்சை எடுப்பவர்களில் இரண்டு பேரில் ஒருவர் இறக்கிறார் என்று அர்த்தம்.
ஒரு கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை நாம் கண்டறிந்தால்
அப்போது 45000 பேருக்கு வெண்ட்டிலேட்டர் தேவைப்படும் சூழல் ஏற்படும்
நம் நாட்டில் இருப்பது 40,000 வெண்ட்டிலேட்டர்கள்.இப்போது ஒரு பத்தாயிரம் கூடி இருக்கலாம்.
3.5 லட்சம் பேர் மரணிக்கும் வாய்ப்பு இருக்கிறது . (CASE FATALITY RATE AT 3.5%)
சுமார் மூன்று லட்சம் பேருக்கு ஐசியூ அட்மிஷன் தேவைப்படும்
(அதிகபட்சம் நம்மிடம் ஒரு லட்சம் ஐசியூ பெட்களுக்கு மேல் இல்லை)
மூன்று லட்சம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும்.
நான் கூறுவது அனைத்தும்
நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஒரு கோடி மக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் போது நிகழ்ந்திருக்கும்.
நான் கூறியது அனைத்தும் அனுமானங்கள் அல்ல.
அறிவியல்.
இதுவரை நிகழ்ந்ததை வைத்து எதிர்காலத்தை திறம்பட கணிக்கும் அறிவியல்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்
கொரோனாவை நாம் எதிர்கொள்ளும் முறைகளில் தளர்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு
யாரேனும் கொரோனாவை எளிதாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பதிவை காட்டுங்கள்
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை