Wednesday , August 17 2022
Breaking News
Home / உலகம் / மக்களுக்குரூ.10000 வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் – காங்கிரஸ்.
Vsolve UK

மக்களுக்குரூ.10000 வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் – காங்கிரஸ்.

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 10 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு உடனடியாக செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தொடர் ஊரடங்கால் மக்கள் சந்தித்து வரும் பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் சமூக ஊடகங்கள் மூலம் 3 மணி நேரத்திற்கு விவாதிக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் இன்று முன்னெடுத்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை இந்த பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அதில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் நலன் கருதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு உடனடியாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று கோரியுள்ள அவர்கள், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை, சிறப்பு ரயில்கள் மூலம் கட்டணம் இன்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 3 மாத ஊதியத்தை அரசே வழங்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், கிராமப்புற மக்களின் நலன் கருதி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும் அந்த பிரச்சாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!

75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக, இன்றைய இளைஞர்கள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES