
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வரும் நிலையில் , வங்கிகளும், வீட்டுக்கடன், நீண்ட கால வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு என அனைத்தின் மீதும் வட்டியை குறைக்க தொடங்கியுள்ளன.
தற்போதைய நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில், வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7 சதவிதமாகவும், நீண்டகால வைப்பு நிதிக்கான வட்டி 5.5 சதவிதமாகவும், சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் 2.75 சதவிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
இதே நிலை தான் HDFC, ICICI தொடங்கி அனைத்து வங்கிகளிலும் தற்போது உள்ளது. இந்நிலையில், சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை நீண்ட கால வைப்பு நிதிக்கு மாற்றும் வசதியும் வங்கிகளில் உள்ளது. அதன் பெயர் sweep in fixed deposit. அதாவது. ஒருவர் தன்னுடைய சேமிப்பு கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தால், அதற்கு தற்போதைய நிலையில் 3 சதவிதம் தான் வட்டி கிடைக்கும். அந்த பணத்தின் ஒரு பகுதியை, sweep in fixed deposit திட்டத்திற்கு மாற்றினால், அதற்கு fixed deposit-க்கான வட்டி கிடைக்கும்.
ஒரு வேளை அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால், வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலவு செய்வதை போல், இந்த sweep in fixed depositல் வைத்திருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது, sweep in fixed depositல் மீதம் இருக்கும் பணத்திற்கு அதே அளவு வட்டி கிடைக்கும்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்துள்ளது. இது உயர்த்தப்படும்போது தான் சேமிப்புக்கான வட்டி அதிகரிக்கும். அது வரை இது போன்ற திட்டங்கள் சேமிப்பை அதிகரிக்க உதவும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
Source : News 18