
ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஜியோமார்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்கட்டமாக சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் வரவு காரணமாக ஏற்கனவே ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மும்பையில் கடந்த மாதம் ஜியோமார்ட் தனது சோதனையை தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் ஜியோ டிஜிட்டலில் இருந்து 9.99% பங்குகளை வாங்கியது. இதனையடுத்து ஜியோ நிறுவனம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் வசதியுடன் ஆன்லைன் விற்பனையில் குறுகிய காலத்தில் நன்றாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோமார்ட் சேவையை பெற வாடிகையாளர்கள், 88500 08000 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். தங்கள் ஆர்டரை கொடுத்த பின், ஜியோமார்ட் அந்த பொருட்களை ஆர்டர் கொடுத்தவர்களின் வீட்டுக்கு அருகேயுள்ள மளிகை கடையில் அதை பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தும். இப்போதைய சூழலில் ஹோம் டெலிவரி தொடங்கப்படவில்லை. ஆனால் லாக்டவுன் முடிந்ததும் ஹோம் டெலிவரி கொடுக்கப்படலாம்.
tamil.asiavillenews