முதல்வர் பினராய் விஜயன் பேட்டி: கேரளாவில் 2வது நாளாக பாதிப்பு இல்லை
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் இன்று (நேற்று) யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று 61 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 499 ஆகும்.
தற்போது 21724 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். கேரளாவில் 84 நோய் தீவிர பகுதிகள் உள்ளன.
கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்த போதிலும், மலையாளிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 80க்கும் மேற்பட்ட மலையாளிகள் இறந்துள்ளனர். இதுவரை பல்வேறு மாநிலங்களில் சிக்கி உள்ள 1,66,263 பேர் கேரளா திரும்ப முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்ராவில் தங்கி இருந்தவர்கள் அதிகமாகும். 28220 பேர் பாஸ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 5470 பாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.