வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் கடந்த மூன்று வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத காரணத்தினால் உலகின் அளவில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரவி வந்தன. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட செய்திகள் காட்டு தீயாய் பரவின. இந்நிலையில் மே தினத்தன்று நேற்று கிம் ஜாங் உன் திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியதாக மத்திய கொரியன் செய்தி ஏஜென்சி புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களாக கிம் பற்றிய பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு உலக அளவில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு உலக அளவில் பரவிவரும் கொரோன விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருக்கலாம் என்று சிலர் கருத்துக்களை கூறிவருகின்றனர்.