Monday , August 15 2022
Breaking News
Home / இந்தியா / தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி ஐ.நா., நிரந்தர பிரதிநிதியாக நியமனம்
Vsolve UK

தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி ஐ.நா., நிரந்தர பிரதிநிதியாக நியமனம்

புதுடில்லி: ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு பிப்.,5 ம் தேதி முதல் வெளியுறவுத்துறையின் பொருளாதார பிரிவில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

#ilangyarkural #tamilan

 

நன்றி: Dinamalar

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES