திரையுலகினரை அதிர்ச்சியில் உறைய வைத்த நடிகர் இர்பான் கான் மரணம்!
2018ம் ஆண்டு முதல் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருத நடிகர் இர்பான் கானுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்ததால் மும்பையில் கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த இர்பான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதி நிமிடங்களில் அவரது குடும்பத்தினர் அருகில் இருந்துள்ளனர். அவருக்கு சுதபா என்ற மனைவியும், பபில், அயன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
திரையுலக வாழ்க்கை:
ஜெய்பூரில் பிறந்தவரான இர்பான் கான், 1985ம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளாக நடித்து வந்தார். இந்தி படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும் ஹாலிவுட் மற்றும் இங்கிலாந்து படங்களிலும் நடித்துள்ளார் இர்பான்.
ஸ்பைடர் மேன், ஜூராஸிக் வோர்ல்ட், The Warrior, The Namesake போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இர்பான் ஸ்லம்டாக் மில்லினியர், Piku போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்திய மொழி படங்களிலேயே அதிகமான் வசூலை வாரி குவித்த Hindi Medium என்ற படமும் இர்பான் கான் நடிப்பில் வெளிவந்தது தான்.
Paan Singh Tomar படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் இர்பான் கான்.
2011ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதும் இவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மாபெரும் நடிகர்களில் முக்கியமானவர்களுள் ஒருவராக விளங்கி வந்த இர்பான் கானின் மறைவு இந்தி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மொழி திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“உலக சினிமாவுக்கு மாபெரும் பங்களிப்பை தந்த நம்பமுடியாத திறமை படைத்தவர் இர்பான் கான், அவரின் பிரிவால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. வெகு விரைவாகவே நம்மை பிரிந்து சென்றுவிட்டார்” என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் இர்பான் கான் மறைவுக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமுமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இறப்பில் தாயுடன் சேர்ந்த இர்பான்:
இர்பானின் தாயார் சயீதா பேகம் (வயது 95) கடந்த சனிக்கிழமையன்று காலை தான் உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்துகொள்ள இயலாத உடல்நிலையில் தான் இர்பான் இருந்துள்ளார். தாயார் இறந்த ஒருவார காலத்துக்குள் இர்பானும் மரணமடைந்தது அக்குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி அவரின் நடிப்பில் angrezi medium இந்தி திரைப்படம் வெளிவந்தது. இதுவே அவரின் கடைசி படமாகவும் அமைந்துவிட்டது.
#IrrfanKhan #Bollywood
நன்றி: News7 Tamil, twitter