Wednesday , August 10 2022
Breaking News
Home / இந்தியா / பிரதமர் மோடிக்கு முதலிடம்..!
Vsolve UK

பிரதமர் மோடிக்கு முதலிடம்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார் என்று கருத்துக்கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் அனைத்து நாடுகளும் செய்வதறியாமல் ஸ்தம்பித்து உள்ளனர். உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே உலக தலைவர்களின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ‘மார்னிங் கன்சல்ட்’ நடத்திய கருத்துக்கணிப்பில் ஏப்ரல் 14 நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 65 சதவீத ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கருத்துக்கணிப்பை குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வாழத்து தெரிவித்துள்ளார். அதில், “கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் உலக நாடுகளை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துகிறார். நாட்டு மக்களுக்கு ஒருபுறம் பாதுகாப்பு அளித்து கொண்டே மறுபுறம் உலக நாடுகளுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து வருகிறார். இதனால் உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்“ என்றுள்ளார்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES