Monday , August 15 2022
Breaking News
Home / இந்தியா / கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை…
Vsolve UK

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை…

கொரோனா வைரசின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் 155-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.  இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்து உள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக  இன்று  இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற  உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bala Trust

About Loganathan K

Check Also

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES