Friday , August 19 2022
Breaking News
Home / உலகம் / கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து; பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா?.
Vsolve UK

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து; பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா?.

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா இன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாஷிங்டன்,
சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், 1,58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 5,800-ஐ தாண்டியது.  அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 49- மாகாணங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரசை எதிர்கொள்ள பல்வேறு  முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரிசோதனை குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத  அமெரிக்காவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சியாட்டில் உள்ள  கைசர் பெர்மனண்டே வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற இருக்கும் இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவவனம்  நிதியுதவி செய்துள்ளதாகவும் அந்த சுகாதார அதிகாரி குறிப்பிட்டார். கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை முழுமையாக சரிபார்க்க  ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Bala Trust

About Loganathan K

Check Also

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு நீதியின் குரல் சார்பாக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES