Saturday , August 13 2022
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / மதுரை / தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை
Vsolve UK

தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை

மதுரை 15 மார்ச் 2020

தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை.

செய்தியாளர்.
முகம்மது இத்ரீஸ் ஷாபி.

திருப்பரங்குன்றம் மார்ச் 15 அவனியாபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஹர்ஷிதா மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணம் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் இளங்குமரன் செய்தியாளரிடம் கூறியது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை ஹீமோதெரபி, மற்றும் கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பழமையான முறையான கோபால்ட் கதிர்வீச்சு மூலம் அதிநவீன முப்பரிமாண முறை கதிர்வீச்சு மூலம் குறைந்த நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தயாரான அதிநவீன பாபா பிராண்ட் 3டி கதிர்வீச்சு முறையில் புற்று பாதித்த செல்களுக்கு மட்டும் கதிர்வீச்சு அளிப்பதால் மற்ற செல்கள் பாதிப்படையாமல் காணப்படுவதோடு சிகிச்சைக்காக குறைந்த நேரம் மட்டுமே ஆகும். தற்போது அதிக அளவில் புற்றுநோய் பரவி வருகிறது. அதிலும் அதிகபட்சமாக வாய், கழுத்து பகுதிகளில் தவறான பழக்கங்களால் வருகிறது. நோய்க்கான சிகிச்சையை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகிறோம்.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

இன்ஸ்பெக்டர் வீட்டை உடைத்து திருட்டு

மேலூர்–மேலுார் காந்திநகரில் இன்ஸ்பெக்டர் வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த பொருட்களை திருடிச் சென்றனர்.காந்திநகர் 3 வது தெருவை சேர்ந்தவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES