Saturday , August 13 2022
Breaking News
Home / உலகம் / ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாம் மீது ராக்கெட் தாக்குதல்…
Vsolve UK

ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாம் மீது ராக்கெட் தாக்குதல்…

பாக்தாத்:

ஈராக் நாட்டில் ஹெஜ்பொல்லா, ஹாஷேத் அல்-ஷாபி உள்ளிட்ட போராளி குழுவினர் அரசுக்கு
எதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை அழிப்பதற்காக உள்நாட்டு படைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கூட்டுப் படையினர் தங்கி இருக்கும் முகாம்களின் மீது 20-க்கும் அதிகமான ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் போராளிகள் நடத்திய ஒரு தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த இரு ராணுவ வீரர்களும் பிரிட்டன் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரரும் கொல்லப்பட்டனர்.
கோப்புப் படம்

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வடபகுதியில் கூட்டுப் படையினர் தங்கியிருந்த தாஜி விமானப்படை தளத்தின்மீது இன்று அடுத்தடுத்து பல ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான சேதங்களைப் பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Bala Trust

About Loganathan K

Check Also

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளிடம் நேரடி கள ஆய்வு.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES