Saturday , August 13 2022
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / தூத்துக்குடி / பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு.. பாண்டே காலில் விழுந்த திமுக… எச். ராஜா விட மாட்டேங்குறாரே!
Vsolve UK

பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு.. பாண்டே காலில் விழுந்த திமுக… எச். ராஜா விட மாட்டேங்குறாரே!

தூத்துக்குடி: “தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை ஒழிப்போம், பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு, ஒரு பீகார் பார்ப்பனியன் காலில் போய் திமுக தலையை பிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அவர் பேர் என்ன? பிரசாந்த் கிஷோர் என்ன, பிரசாந்த் கிஷோர் “பாண்டே”… ஹி இஸ் பிரசாந்த் கிஷோர் “பாண்டே”.. அதுதான் எனக்கு தெரியுது.. வேற எனக்கு தெரியாது” என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜா பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.. சிஏஏ குறித்த கருத்துக்களை கூறுவதுன், அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும் விளக்கம் தந்து வருகிறார்.

அந்த வகையில் தூத்துக்குடியில் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசியதன் சுருக்கம்தான் இது..
தேர்தல் அறிக்கையிலேயே குடியுரிமை சட்டத்தை கொண்டு வருவோம்னு சொல்லி இருக்கோம்.. ஏன்னா இது போன லோக்சபாவிலேயே பாஸ் ஆனது.. ராஜ்யசபாவில் பாஸ் ஆகாததால், இதை திருப்பியும் கொண்டு வருவோம்ன்னு சொல்லி 2 அவைகளிலும் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலை பெற்று கெஜட்-டுல போட்ட ஒரு சட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பாராளுமன்ற, நாடாளுமன்ற அதிகாரத்தின் மீது தாக்குதல் நடக்கிறது.
இரண்டாவது, இதை செயல்படுத்த வேண்டிய நிர்வாகம், அதை அதிகாரிகள், காவல்துறை இவர்கள் மீது மிரட்டல்கள், தாக்குதல்.. டெல்லியில் ஐபி ஆபீஸர் 400 இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.. அப்பறம் போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டு…!

மூன்றாவது வருந்தத்தக்க விஷயம், நீதிபதிகளை மிரட்டுவது.. இப்போ திருப்பூரில் ஒரு பப்ளிக் நியூஸன்ஸ்.. பொது இடத்தில் அனுமதி இல்லாமல், தினந்தோறும் ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் நடத்துவதால், இதை எதிர்த்து ஒரு வழக்கறிஞர் வழக்கு தொடுக்கிறார். நீதிபதிகளும் இதை உடனடியா கிளியர் செய்யணும் என்று தீர்ப்பு சொல்கிறார்கள்.. ஆனால் எஸ்பிபிஐ, பிஃஎப்ஐ, 40-,க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போய் நீதிபதிக்கு முன்னாடி போய் கலாட்டா பண்றாங்க… ஆக, பாராளுமன்றம், சட்டமன்ற, நீதித்துறை இது 3 மேலயும் தாக்குதல் நடத்தப்படுகிறது.. இதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷின் அந்த நாட்டில் மதரீதியாக வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினர் 33 ஆயிரம் பேருக்கு குடியுரிமை தந்திருக்கோம்.. ஆனால் யாருடைய குடியுரிமையை எடுக்கலையே? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? போராட்டம்? சட்டவிரோதமா ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை குடுன்னு போராட்டம் நடத்துற அவமானம், அசிங்கம், அருவெறுக்கத்தக்க செயல் உலகத்துல எங்கியுமே இல்லை.. இங்கதான் எதிர்க்கட்சிகள் நடத்தறாங்க.
இதை நான்-இன்டியன், ஆன்டி-இன்டியன்-ன்னு நான் சொல்றேன்.. சோனியா மாதிரி இத்தாலியர்கள் நான்-இந்தியன்.. ஸ்டாலின் மாதிரியா ஆன்ட்டி-இன்டியன். இந்த மாதிரி நான்-இந்தியன், ஆன்ட்டி இந்தியன் கூட்டினால்தான் நாட்டில் 3 தூண்களின் மீதும் தாக்குதல் நடந்துட்டுட்டு இருக்கு. இதுஏற்புடையது இல்லை” என்றார்.
இதையடுத்து, குடியுரிமை பற்றி பிரசாந்த் கிஷோர் சொன்னது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு எச்.ராஜா, “இங்க பாருங்க, பாகிஸ்தான், பங்களாதேஷ்ன்னு சட்டவிரோதமாக ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை குடுன்னு கேட்க மாட்டாங்களே.. அதனால பிரசாந்த் கிஷோர் சொன்னதை திமுகவில் ஏத்துக்கல போல இருக்கு.. உண்மையிலேயே பிரசாந்த் கிஷோர் இதைதான் சொன்னாரா, இல்லையான்னு உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது.. ஆனா அவர் பகிரங்கமாக எதையுமே சொல்ல..
ஆனால், தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை ஒழிப்போம், பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு, ஒரு பீகார் பார்ப்பனியன் காலில் போய் திமுக தலையை பிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அவர் பேர் என்ன? பிரசாந்த் கிஷோர் என்ன,.. “பாண்டே”… ஹி இஸ் பிரசாந்த் கிஷோர் “பாண்டே”.. அதுதான் எனக்கு தெரியுது.. வேற எனக்கு தெரியாது” என்றார்.

Bala Trust

About Loganathan K

Check Also

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு வருவோரால் தொடர் பாதிப்பு:அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES