Wednesday , August 17 2022
Breaking News
Home / இந்தியா / 7 நாடுகளுக்கு விமானசேவை ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு…
Vsolve UK

7 நாடுகளுக்கு விமானசேவை ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு…

புதுடில்லி: கொரோனா உலக நாடுகளில் பரவி வருவதையடுத்து 7 நாடுகளுக்கு விமானசேவையை நிறுத்துவதாக ஏர்இந்தியா அறிவித்துள்ளது.

உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென்கொரியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு வரும் ஏப்., 30ம் தேதி வரை விமானசேவை நிறுத்தப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

முன்னதாக இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் விமான சேவை குறைக்கப்பட்டிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட 7 நாடுகளுக்கும் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Loganathan K

Check Also

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES