லாவா நிறுவனம் இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் புதிய லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது.
மிக எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் லாவா பே செயலியில் பயனர்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் மொபைல் போன் நம்பர், அனுப்ப வேண்டிய தொகை மற்றும் யு.பி.ஐ. பின் அல்லது டிரான்சாக்ஷன் குறியீட்டை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பணம் அனுப்பியவர் மற்றும் பெறுவோருக்கு நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்பட்டு விடும்.

பணம் அனுப்பி கொள்வது மட்டுமின்றி பயனர்கள் தங்களின் வங்கி கணக்கில் உள்ள அக்கவுண்ட் பேலண்ஸ் விவரங்களையும் செயலியில் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்ய பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வங்கி கிளைக்கு சென்று செயலியை கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.