பாஜகவின் தமிழக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 1-ஆம் தேதியன்று தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பிறகு தமிழகத்தின் பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் இன்று (மார்ச் 11) எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை – தமிழிசை சாதித்தது எப்படி?
- பாஜக-வுக்கு மீண்டும் பெரும் வெற்றி: எப்படி சாத்தியமானது?
எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களில் ஒருவர் தமிழக பாஜகதலைவராக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இதுவரை பெரிதும் விவாதிக்கப்படாத எல்.முருகன் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1977ஆம் ஆண்டு பிறந்த எல்.முருகன், சட்டம் பயின்றவர். தற்போது அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.