Monday , August 15 2022
Breaking News
Home / உலகம் / சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…
Vsolve UK

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இதனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
Bala Trust

About Loganathan K

Check Also

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES