கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இல்லாததால், இத்தாலியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் இந்திய மாணவர்கள் 55 பேர் தவித்து வருகின்றனர்.
ரோம்,
இத்தாலி நாட்டு விமான நிலையத்தில் இந்திய மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். நேற்றிரவு 11.30 மணிக்கு அங்கிருந்து விமானம் ஒன்று இந்தியாவிற்குப் புறப்பட இருந்தது. இதில் 80 மாணவர்கள் உள்பட 110 பேர் பயணம் செய்வதற்காக இத்தாலி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற மருத்துவச் சான்று கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருத்துவ சான்று இல்லாததால் அவர்கள் அனைவருக்கும் போர்டிங் பாஸ் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.