Wednesday , August 17 2022
Breaking News
Home / தமிழகம் / உறுப்பினர் சேர்க்கை பட்டியலை கொண்டு வாருங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
Vsolve UK

உறுப்பினர் சேர்க்கை பட்டியலை கொண்டு வாருங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை பட்டியலை கொண்டு வரும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘ரஜினிகாந்த்….’ கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில், காந்த குரலாக ஒலித்து கொண்டிருக்கும் பெயர். இப்போது தமிழக அரசியல் களத்திலும் நேரடியாக எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. சமீபகால ரஜினிகாந்தின் அரசியல் கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பு தீயை பற்ற வைக்க தவறியதே இல்லை. இதுவே அவர் மீதான அரசியல் எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

தன்னுடைய 25 ஆண்டு கால அரசியல் எதிர்பார்ப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ரசிகர்கள் மன்ற சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்தார், ரஜினிகாந்த். ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி… என்ற ஒற்றை வார்த்தை தான் அது. இதற் காக 25 ஆண்டுகளாக காத்திருந்த அவரது ரசிகர்கள், இப்போது அவரின் கட்சி பெயரின் அறிவிப்புக்காக 2 ஆண்டுகளாக தவமாய் தவம் இருந்து காத்திருக்கிறார்கள்.
சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த் புதிய கட்சியின் பெயரை எப்போது வெளியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையிலும், தமிழக சட்டசபைக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையிலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்து இருக்கிறார். இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து, ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், தனது மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரப்படுத்தப்பட்டது. மகளிர் அணியும் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சிக்கு உண்டான அத்தனை அடித்தளத்தையும் ரஜினிகாந்த் உருவாக்கி முடித்துள்ளார். மன்றம் கட்சியாக மாறும்போது, மன்ற மாநில, மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளாக மாற்றப்படுவார்கள்.
எனவே தான் தற்போது நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அடையாள அட்டையும் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆலோசனை கூட்டம் நடைபெறும் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குள் அடையாள அட்டை இன்றி யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி, முதல் மாநாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டம் வாரியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை விவர பட்டியலையும் கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்கி, ஆகஸ்டில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவும் ரஜினிகாந்த் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Bala Trust

About Loganathan K

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES