Wednesday , August 17 2022
Breaking News
Home / உலகம் / கொரோனா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Vsolve UK

கொரோனா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

டெல்லி:

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்று இங்கே விளக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்கள், உதவிக்கு மத்திய அரசு உதவு எண்ணை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை முடக்கி போட்டுள்ளது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. இப்போதுதான் இந்த வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இது நினைத்ததை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் 7 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. டெல்லியில் 6 பேருக்கு, ஹைதராபாத்தில் ஒருவருக்கு வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3100 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க உள்ள பலி எண்ணிக்கை ஆகும் இது.

சீனாவில் மட்டும் 3000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 91000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.

அறிகுறிகள்:

இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், பின்வரும் அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும். ஜலதோஷம் காய்ச்சல் நெஞ்சில், மூக்கில், தொண்டையில் சளி தொல்லை வறண்ட இருமல், வறண்ட தொண்டை லேசான நெஞ்சு வலி மூச்சு விடுவதில் சிரமம் சிலருக்கு வயிற்றுப்போக்கும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது..

தடுக்கும் முறைகள்:

இந்த கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள நிறைய வழிகள் உள்ளது முதலில் சுத்தமாக இருக்க வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், குளிக்க வேண்டும். கைகளின் பின்பக்கத்தை கண்டிப்பாக கழுவ வேண்டும். நக இடுக்குகளை கழுவ வேண்டும். வெளியே சென்றுவிட்டு வந்தால் உடலை சுத்தம் செய்ய வேண்டும் . இந்த வைரஸ் நீர் குமிழிகள் மூலம் பரவும். அதனால் தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகே செல்ல கூடாது. உங்களுக்கு தும்மல், இருமல் இருந்தால், முகத்தை மாஸ்க் கொண்டு மூடுவது நல்லது. என்95 மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும். உலக சுகாதார மையம் கொடுத்த அறிவுரையின் படி உங்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க குறைந்தது மற்றவர்களிடம் கிருந்து 3 அடி தள்ளி நடக்க வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். வெவ்வால்களை தொடுவது, விலங்குகள் உடன் விளையாடுவது, சரணாலயங்களுக்கு செல்வது, ட்ரெக்கிங் செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்கலாம். அதேபோல் அதிக அளவு தாடி, முடி வைத்து இருந்தால் அதையும் சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்:

உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது சிறப்பு. தொடர்ந்து இருமல், தும்மல் இருந்தால் வெளியே செல்லாமல் உடனே மருத்துவரை அணுகிவிட்டு, வீட்டில் தனி அறையில் ஓய்வு எடுப்பது சிறப்பானது. பொது இடங்களை தவிருங்கள். குறைந்தது 14 நாட்கள் தனியாக இருப்பது சிறந்தது.

உதவி எண்கள்:

உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸ் உதவி எண்ணை அறிவித்துள்ளது..

இலவச போன்: +91-11-23978046

மின் அஞ்சல்: ncov2019@gmail.com

Bala Trust

About Loganathan K

Check Also

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களின் இல்ல விழா.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன், கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன், கழக உயர்மட்டகுழு உறுப்பினர், ஜெ.பாலன் அவர்களின் ஆசியுடன் மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES