Monday , August 15 2022
Breaking News
Home / இந்தியா / இதற்குத்தான் இப்படி சொன்னாரா? சமூக வலைத்தளங்களில் மோடி புதிய பதிவு
Vsolve UK

இதற்குத்தான் இப்படி சொன்னாரா? சமூக வலைத்தளங்களில் மோடி புதிய பதிவு

மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார்.

புதுடெல்லி:
இந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தள கணக்குகளை விட்டுக்கொடுப்பது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி நேற்று திடீரென அறிவித்தார். உங்கள் அனைவரையும் இடுகையிட வைப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனால் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறப்போகிறார் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகின.
மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட மறுவினாடியே லட்சக்கணக்கானோர் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகக் கூடாது என்று, “நோ சார்” என பதிவிட்டனர். இதனால் ‘நோ சார்’ என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில், சமூக வலைத்தள கணக்குகளை விட்டுக்கொடுப்பது பற்றி அறிவித்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில் சமூக வலைத்தளம் தொடர்பாக கூறிய சஸ்பென்சை உடைத்துள்ளார்.
‘இந்த மகளிர் தினத்தன்று, எனது சமூக வலைத்தள கணக்குளை பெண்கள் நிர்வகிக்கலாம். தனது வாழ்க்கை மற்றும் பணியால் முன்மாதிரியாக திகழும் பெண்களிடம் எனது சமூக வலைத்தளங்களை தர தயார். இது பல லட்சம் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா, அல்லது இதுபோன்ற பெண்களை உங்களுக்குத் தெரியுமா?  #SheInspireUs என்ற ஹேஷ்டேக்கில் இது தொடர்பான தகவல்களை ஷேர் செய்யுங்கள்’ என மோடி கூறியுள்ளார்.
Bala Trust

About Loganathan K

Check Also

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES