Wednesday , August 10 2022
Breaking News
Home / இந்தியா / பா.ஜ. பெண் எம்.பி.க்களிடம் காங். எம்.பி.க்கள் தவறாக நடந்து கொண்டனர்
Vsolve UK

பா.ஜ. பெண் எம்.பி.க்களிடம் காங். எம்.பி.க்கள் தவறாக நடந்து கொண்டனர்

புதுடில்லி: பா.ஜ. பெண் எம்.பி.க்கிடம், காங். எம்.பிக்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டனர் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
டில்லி கலவரத்தை மையமாக வைத்து, சபைக்கு உள்ளேயும் வெளியேயும், மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் செய்த அமளி மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக பார்லிமென்டில், நேற்று சலசலப்பு ஏற்பட்டது.

அமளி நீடித்ததால், பார்லிமென்டின் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ” அவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், பா.ஜ., பெண் எம்.பி.க்களிடம் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கடந்த 3 கூட்டத்தொடர்களாகக் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் சக்தி, அவையை நடத்தவிடாமல் இடையூறு செய்கிறார்கள்” இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்

 

Bala Trust

About Loganathan K

Check Also

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES