புதுவையில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்தார்.
புதுவை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் சாலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது.
மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் மற்றும் அரசு தலைமை செயலர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ‘புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய சாலைகள் அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி-மாமல்லபுரம், விழுப்புரம்- நாகப்பட்டினம் வரை 4 வழி சாலை அமைக்கப்படும். புதுவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை, மதகடிப்பட்டு முதல் புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைப்பது தொடர்பான 4 திட்டங்களை மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் அளித்துள்ளோம். அதனை செய்து தர அதனை செய்து தர மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்’ என்றார்.
அதைத்தொடர்ந்து அரவிந்தர் அன்னை ஆசிரமத்துக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி சென்றார். அங்கு அவருடன், பாரதீய ஜனதா நிர்வாகிகள் சிலர் செல்ல முயன்றனர். அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது.