Wednesday , August 10 2022
Breaking News
Home / உலகம் / ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘நாசா’ அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
Vsolve UK

ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘நாசா’ அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வருங்காலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது. அதற்கு, பல ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும் என்பதால், அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்தும்பணியில், நாசா இறங்கியுள்ளது.

நாசா நிர்வாக அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச விண்வெளி நிலையத்தில், 20 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறோம். இதை கொண்டாடும்விதமாக, 2024ல், முதல் பெண் விண்வெளி வீராங்கனையை, நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அவருடன் ஒரு ஆண் ஆராய்ச்சியாளரையும் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

அதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன.எங்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன், இணைந்து பணியாற்ற, திறமையான பெண்கள் மற்றும் ஆண்களை தேர்வு செய்து, பணியமர்த்த முடிவு செய்து உள்ளோம். விண்வெளி வீரர்களாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நபர்களுக்கான நேரம் இது. தகுதியுள்ள அமெரிக்கர்கள், மார்ச், 2ம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, இரண்டு மணி நேர, ‘ஆன்லைன்’ தேர்வு இருக்கும். அந்த தேர்வை எழுதுவோரில் இருந்து, அடுத்தகட்ட ஆராய்ச்சியாளர்கள், 2021ன் மத்தியில், தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வானோருக்கு, டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Bala Trust

About Loganathan K

Check Also

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES