Monday , August 15 2022
Breaking News
Home / விளையாட்டு / முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது
Vsolve UK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது.

கான்பெர்ரா,

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

கான்பெர்ராவில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 67 ரன்கள்(44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (42 ரன்) சிக்சர் அடித்து இலக்கை எட்ட வைத்தார். ஷபாலி வர்மா (30 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (26 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

இன்று (சனிக்கிழமை) கான்பெர்ராவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Bala Trust

About Loganathan K

Check Also

ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை – பாகிஸ்தான் வீரர் கருத்து!

ரோகித் சர்மாவிடம் உள்ள திறமை, விராட் கோலிக்கு இல்லை, ரோஹித் சர்மாவால் ஆட்டத்தை வினாடிகளில் மாற்ற முடியும் என்று பாகிஸ்தான் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES