Sunday , August 14 2022
Breaking News
Home / தமிழகம் / சிறார் ஆபாசப்படம் பார்த்ததாக சென்னையில் ஒருவர் கைது
Vsolve UK

சிறார் ஆபாசப்படம் பார்த்ததாக சென்னையில் ஒருவர் கைது

சென்னையில் 2 ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்ததாக அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞரை ஐபி முகவரியை வைத்து போலீஸார் கைது செய்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதுதொடர்பான சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.

  • “தமிழகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார்”

  • ஆபாசமான விளம்பரம் வர காரணம் நீங்களா? சரிசெய்வது எப்படி?

இந்நிலையில், சிறார் ஆபாச வலைதளங்களை பார்ப்பவர்கள் குறித்து ஐபி அட்ரஸ்களை வைத்து போலீஸார் சோதனையிட்டு வந்தபோது அம்பத்தூரை சேர்ந்த ஹரீஷ் (24) என்கிற இளைஞர் கடந்த 2018- ஆகஸ்டு மாதம் முதல் தற்போது கைது செய்யப்படும்வரை சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் அனுப்பிய ஐபி அட்ரஸ் அடிப்படையில் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஹரீஷை புதன்கிழமை மதியம் கைது செய்தனர். ஹரீஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றுள்ளார். அவர் மீது ஐடி ஆக்ட் 67(பி), 14(1) போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bala Trust

About Loganathan K

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES