Saturday , August 13 2022
Breaking News
Home / திருப்பூர் / ‘ஸ்மார்ட்’ அட்டை! மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்:ஒன்றியம் வாரியமாக சிறப்பு முகாம்
Vsolve UK

‘ஸ்மார்ட்’ அட்டை! மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்:ஒன்றியம் வாரியமாக சிறப்பு முகாம்

திருப்பூர்:ஸ்மார்ட்’ அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமில் நேற்று, 920 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் விவரத்தை சேகரித்து, புதிய திட்டங்களை செயல்படுத்த வசதியாக, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.மாநில அரசுகளின் அடையாள அட்டை பெற்றுள்ள, 21 வகையான, மாற்றுத்திறனாளிகளுக்கு, மத்திய அரசின், தனித்துவ அடையாள அட்டை (ஸ்மார்ட் அட்டை) வழங்கப்படுகிறது. இதற்காக, ஆன்லைன் மூலம் விவரம் பதிவு செய்யப்படுகிறது.மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘ஸ்மார்ட்’ அட்டைக்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியுள்ளது. நேற்று, அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி ஒன்றியங்களில் முகாம் நடந்தது. காங்கயம், பல்லடம், பொங்கலுாரில் இன்றும், தாராபுரம், குண்டடம், மூலனுார், வெள்ளகோவிலில், நாளையும் முகாம் நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலத்தில், 31ம் தேதி சிறப்பு முகாம் நடக்க உள்ளது. திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் வந்து, விவரங்களை சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் கூறியதாவது:இன்று (நேற்று) நடந்த முகாமில், 920 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆதார் அட்டை, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு, பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட, ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல்; இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ; மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் வந்து விண்ணப்பிக்கலாம்.இதுதவிர, http://www.swavalambancard.gov.in என்ற இணையதள முகவரியிலும், பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 0421 2971165 என்ற எண்களில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Bala Trust

About Loganathan K

Check Also

தந்தையை இழந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய ரூட்ஸ் அறக்கட்டளை…

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தந்தையை இழந்த திருப்பூர் அருள்புரம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்னுபிரியாவின்மூன்றாண்டு உயர்கல்வி கட்டணத்தை ரூட்ஸ் கல்வி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES