திமுகவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை கட்சி மேலிடம் நியமித்துள்ளது….
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் இந்தப் பதவியில் ஏற்கனவே இருந்துள்ளனர். தற்போது டி.ஆர். பாலு வகித்து வந்த இந்தப் பதவியை அவரிடமிருந்து பறித்து கே.என். நேருவுக்கு திமுக மேலிடம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….