திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் செம்பறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை மேற்பதற்க்கு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பில்லூர் அருகில் வாடகை நிலத்தில் ஆட்டுபட்டி போட்டு தன் ஆடுகளை மேய்த்து வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் செம்மறி ஆட்டு குட்டிகளை புட்டியில் அடைத்துவிட்டு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார் மாலை ஆடுகளை மேய்த்து விட்டு ஆட்டுபட்டியில் அடைப்பதற்காக ஆடுகளை ஓட்டி வந்தார் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு குட்டிகளை திறந்து விடுவதற்காக சென்று பார்த்தபோது 40 செம்பறி குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் காவல் துறையினர் ஆட்டு குட்டிகள் இறப்பை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்…
Check Also
வேடசந்தூர் அருகே கார் விபத்து…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …