மதுரை 15 அக்டோபர் 2019
மதுரை இன்று நடந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விழாவிலே கலந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த நிகழ்வானது ஒவ்வொரு குடிமகனுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது ஏழை,எளிய பாமரனும் இந்த சட்டத்தை புரிந்து கொள்வதற்கு தெரிந்து கொள்வதற்கு, ஒரு நல்ல படியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இந்த சட்டத்தை கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் கொண்டு சென்ற பெருமை இந்த மக்கள் விழிப்புணர்வு கழகத்தைச் சேர்ந்த நிறுவனர் ஹக்கீம் அவர்கள், ஜான்சன் அவர்கள் மட்டும் அவருடன் இணைந்து பணியாற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்திலே நன்றி கூறி வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கனம்
வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராஜன்
மதுரை