கரூர் 12 அக்டோபர் 2019
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தான்தோன்றிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு கல்யாண வெங்கட்ராமன் சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் புரட்டாசி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் நேற்றிக்கடன்கள்,அன்னதானம் வழங்கி பெருமாளை தரிசிப்பது வழக்கம்.மாதம் முழுவதும் விசேஷ பூஜைகள் நடந்தாலும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை வெகு சிறப்பாக மக்கள் குடி சுவாமி தரிசனம் பெறுவது வழக்கம்.
கரூர் மாவட்டம்,கரூர் வட்டம் இராயனூர், பழனிவேல் நகர் சாதனை இளைஞர் நற்பணி மன்றம் சேர்ந்த இளைஞர்கள் புரட்டாசி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி பெருமாளை வணங்கினர்.