Saturday , August 13 2022
Breaking News
Home / இந்தியா / நீங்கியது தடை – ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டி
Vsolve UK

நீங்கியது தடை – ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டி

இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான இவர், ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பரிசீலித்த இலங்கை கோர்ட், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயே ராஜபக்சே போட்டியிடுவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

Bala Trust

About Admin

Check Also

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளிடம் நேரடி கள ஆய்வு.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES