கரூர் 05 அக்டோபர் 2019
மகாத்மா காந்திக்கு வந்த கடித உறைகளை சேகரிக்கும் அஞ்சல்தலை சேகரிப்பாளர்
அஞ்சல் தலை சேகரிப்பு பொழுதுபோக்கின் அரசன் என்று அழைப்பார்கள்.
அஞ்சல் தலையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலைகள், குறுவடிவ அஞ்சல்தலைகள் , அஞ்சலட்டை, கடித உறைகள் உட்பட அஞ்சல் முத்திரைகளை சேகரித்து அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
லால்குடி விஜயகுமார் தனது பள்ளிப் பருவத்தில் இருந்து அஞ்சல்தலைகள் சேகரிக்க துவங்கியுள்ளார் .பள்ளி பருவத்திலே அஞ்சல் தலை சேகரிப்பினை பொழுதுபோக்காக கொண்டு சேகரித்து வந்தார் .பின்பு ஒரு தலைப்பின் கீழ் கருப்பொருட்கள் கொண்டு அஞ்சல் தலையை சேகரித்தவர் அஞ்சல் உறையின் மீது பிரபலமான நபர்களிடம் கையெழுத்து வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.மகாத்மா காந்தி தனிச் செயலர் கல்யாணம் ஐயாவிடம் கையெழுத்து பெறுகிறார். பின்பு இந்திய சுதந்திரத்தை குறித்து பல்வேறு கருத்துக்களை கேட்டும் மகாத்மா காந்தியுடன் இருந்த காலம் குறித்தும் கலந்துரையாடினார். இவரது அஞ்சல்தலை சேகரிப்பு கண்டு மகாத்மா காந்தி தனிச் செயலர் கல்யாணம் ஐயா மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்ட கடித அஞ்சல் உறைகளை வழங்கினார்.
1946ஆண்டு முதல் மகாத்மா காந்தி, பாபுஜி, தேசப்பிதா புது தில்லி என அஞ்சலிட்ட உறைகளை சேகரித்து பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். சுதந்திர தியாகிகள் முதல் பொதுமக்கள் வரை மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அந்த கடித உறைகளை சேகரித்திருப்பதை தனது சேகரிப்பில் மிக உயர்வாக கருதி பாதுகாத்து வருகிறார்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது என பல்வேறு மொழிகளில் தேசப்பிதாவுக்கு கடிதங்கள் பதிவு அஞ்சல், விமான அஞ்சல், ரயில்வே அஞ்சல் , ஒப்புதல் சீட்டுடன் கொண்ட பதிவு அஞ்சல் என பல்வேறு முறையில் அன்றைய காலக்கட்டத்தில் கடிதங்களை அனுப்பியுள்ள உறைகளில் ஆறாம் ஜார்ஜ் அஞ்சல் உறை, ஒன்றரை அணா
அஞ்சல் தலைகள் ஒட்டப்பட்டுள்ளன. தனது சேகரிப்பினை திருச்சி தபால்தலை சேகரிப்பு மையம் நடத்தியுள்ள பாபுபெக்ஸ் 2019 கண்காட்சியில் காட்சிபடுத்தியுள்ளார்.
தனது சேகரிப்பு குறித்த தகவல்களை அஞ்சல் தலை சேகரிப்பு மைய அலுவலர் ராஜேஷ், ரகுபதி, மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார், தாமோதரன் ,சதீஷ், கார்த்தி உள்ளிட்டோரிடம் விளக்கிக் கூறினார்.