Monday , August 15 2022
Breaking News
Vsolve UK

கரூர் – 01 செப்டம்பர் 2019

நள்ளிரவில் அரசு மதுபான கடை ஊழியர்களை தாக்கி பணத்தைப் பறிக்க முயன்ற மர்மநபர்கள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் அரசு மதுபான கடை எண் 5029- செயல்பட்டு வருகிறது.

இந்த மதுபான கடையில் மேற்பார்வையாளராக வெங்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் வாங்கல் அருகிலுள்ள கர்ப்பம் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமாரும், விற்பனையாளராக வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்றிரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடை அருகே மது அருந்தியவர்கள் சென்ற பிறகு சுமார் 12 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

கடையின் அருகே கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை அறிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கடையை பூட்டி வந்த மூவரையும் வழிமறித்து அவர்களை தாக்கி வீச்சரிவாள் மற்றும் கத்தியை காட்டி பணத்தை பறிக்க அவர்கள் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி உள்ளனர்.

ஆனால் பிடுங்கி பணப்பையில் ரூபாய் 500 மட்டுமே இருந்துள்ளது.

மற்றவரிடம் விற்பனை செய்த பணம் சுமார் ஒரு லட்சத்தி 14 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.

ஆனால் மர்ம நபர்கள் அந்த பணத்தைப் பறிக்கும் முன்பாகவே மூவரும் சுதாரித்து விட்டனர்.

மூவரும் சுதாரித்ததை அறிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் உடன் தப்பித்துச் சென்றனர்.

இவர்கள் திட்டமிட்டு இந்த சதி செயலை செய்வதற்காகவே கண்காணிப்பு கேமராவில் தங்கள் உருவம் பதிந்து விடாமல் இருப்பதற்காக மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்ததால் மர்ம நபர்கள் குறித்த விவரம் கிடைக்கவில்லை.

அரவக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES