Monday , August 15 2022
Breaking News
Home / இளைஞர் கரம் / குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை
Vsolve UK

குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை

குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே (அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல்.
இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டால் உடனடியாக அல்லது நகராட்சி துப்புரவுபணியாளர்கள் பற்றாக்குறையை பொறுத்து இரண்டொரு நாட்களில் தீர்வு காணப்படும் ஆனால் இந்த சாக்கடைமேல் கடை வைத்து உணவகம் நடத்திவரும் இவருக்கு நகராட்சியால் இவ்வளவு அந்தஸ்து இருப்பதை பார்த்தால் பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய உதாரணம் இதனை ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்கும்படி ஆணையர் அவர் கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிட்டால் நகராட்சி முன் இளைஞர்அமைப்பினர்,இதர அனைத்து கட்சியினர்,மற்றும் தமிழ்நாடு இளைஞர்கட்சி பொதுமக்களை திரட்டி கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

கடம்பை பிரபு.
குளித்தலை நகர செயலாளர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி.

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES