Friday , August 19 2022
Breaking News
Home / தமிழகம் / மாணவர்கள் வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை
Vsolve UK

மாணவர்கள் வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘என் குப்பை – என் பொறுப்பு” என்ற தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் பேசியதாவது:-

கடந்த ஓராண்டு காலமாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் தூய்மையை பாதுகாத்திடும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்காத பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்திடவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் நகராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக ‘என் குப்பை – என் பொறுப்பு” என்ற நிலையை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

பாராட்டு சான்றிதழ்

முன்னதாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் தூய்மையின் அவசியம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஓவிய சங்கங்களின் மூலம் பஸ் நிலைய சுவர்களில் தூய்மையை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையப்பட்டது. அதில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ- மாணவிகள், ஓவிய சங்கங்களை பாராட்டி அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ், மரக்கன்றுகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

இதில் விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

https://www.dailythanthi.com/News/State/awareness-program-on-cleanliness-744666

Bala Trust

About rahila

Viluppuram

Check Also

“இந்தியாவை ஒருங்கினைப்போம்” பாதயாத்திரை – இளம் தலைவர் ராகுல் ஜி

இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES