சென்னை:
கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தில் சோழர்கால கோவில் மாயமாகி உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். இவர் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சிலைகளை மீட்டு கொண்டு வந்தார்.
அதன்பிறகு அவர் சிலை கடத்தல் புலானாய்வு பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். இந்த வேளையிலும் தமிழக கோவில்களில் சிலை, கலை பொருட்கள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரித்தார்.

சேகர்பாபுவுக்கு கடிதம்
இந்நிலையில் தான் பொன் மாணிக்கவேல், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கர்நாடகத்தில் உள்ள பழமையாகன சோழர் கால கோவில் பற்றிய விபரங்கள் உள்ளன. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சோழர்கால கோவில், சிலைகள் மாயமாகி உள்ளதாக கடிதத்தில் கூறியுள்ளார்.

சிலைகள்
கோவிலில் இருந்த வெண்கல சிலை, கற்சிலைகள் திருடப்பட்டுள்ளது. தமிழக அதிகாரிகள் கல்வெட்டுகளை மீட்டு, காணாமல் போன கோவில் மற்றும் சிலைகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசில் புகார் அளிக்க வேண்டும். மேலும் கோவில் இருந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.