அகமதாபாத்: குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் சில பகுதிகளிலும், ஒடிஷா, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில், பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில்) வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் மற்றும் டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா கடற்கரைகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கிழக்கு-மத்திய அரபிக்கடலில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/india/heavy-to-very-heavy-rains-to-continue-in-west-india-466221.html?story=1