Friday , August 19 2022
Breaking News
Home / உலகம் / இது என் புதிய உடல்.. நான் நித்தியானந்தா 2.O – சாவே பயந்து ஓடிருச்சு டா! என்னென்ன சொல்றாரு பாருங்க…
Vsolve UK

இது என் புதிய உடல்.. நான் நித்தியானந்தா 2.O – சாவே பயந்து ஓடிருச்சு டா! என்னென்ன சொல்றாரு பாருங்க…

கைலாசா: 3 மாதங்களுக்கு பிறகு குருபூர்ணிமா நிகழ்வில் தோன்றிய நித்தியானந்தா, புதிய உடலில் மாறி வந்திருப்பதாக பேசி இருக்கிறார்..சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமான நித்தியானந்தா, கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் தோன்றினார்..

கைலாசாவில் நித்தியானந்தா

கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி கொடி, சின்னம், அமைச்சகங்களை அறிவித்த நித்தியானந்தா, பாஸ்போர்ட் பெறவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தா எப்படி தப்பினார்? கைலாசா எங்கிருக்கிறது? ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்துகொண்டே பேசுகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழத் தொடங்கின.

நித்தியானந்தா உடல்நிலை

இதற்கிடையே கடந்த சில வாரங்கள் முன்பாக நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. அவர் சமாதி நிலைக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் ஜூலை 13 ம் தேதி குருபூர்ணிமா நிகழ்வில் நிச்சயம் பக்தர்கள் மத்தியில் பேசுவார் என்று அவரது சீடர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

சாவுக்கே பயம் சாவே என்னை

பார்த்தால் பயந்து ஓடும்டா.. நான் மாறவில்லை. உடல் மாறியுள்ளது. என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இறப்பு கூட உங்களுக்கு அதிக புரிதலை தந்து மனிதராக மாற்றும். உங்கள் உடல் இறப்பதற்கு முன் உங்கள் மன பல முறை இறப்பது நல்லது. அப்போதுதான் வெவ்வேறு வாழ்கையை ஒரே உடலில் வாழலாம். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. என்றார்.

https://tamil.oneindia.com/news/international/nithyananda-says-that-he-is-a-updated-version-death-feared-of-myself/articlecontent-pf724205-466201.html

Bala Trust

About Pandimeena balasubramani

kovai

Check Also

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு நீதியின் குரல் சார்பாக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES