
11.78 லட்சம் பேர் விண்ணப்பம் குரூப் 2 தேர்வை எழுத மொத்தமாக 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. சென்னை மட்டும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
பாலச்சந்திரன் பேட்டி
இந்நிலையில் குரூப் 2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில்,” குரூப் 2, 2A தேர்வு முடிவுகளை ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்படுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். குரூப் 2 தேர்வை 79,000 பேர் தமிழில் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 2 தேர்வு இதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.
THANKS TO : ONE INDIA TAMIL