Monday , August 15 2022
Breaking News
Home / உலகம் / நடிகர் தனுஷின் ‘Wunderbar films’ தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
Vsolve UK

நடிகர் தனுஷின் ‘Wunderbar films’ தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது

 நடிகர் தனுஷின் ‘Wunderbar films’ தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ‘Wunderbar films’ என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி பாடல், எழுத்து, இயக்கம் என பன்முக திறமை கொண்ட இவர், Wunderbar films என்ற பெயரில் நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த Wunderbar films நிறுவனத்தின் யூடியூப் சேனல் நேற்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அந்த சேனலில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து ‘யூடியூப் இந்தியா’, Wunderbar films சேனலை மீட்டெடுக்க உதவி செய்து வருவதாகவும் விரைவில் சேனல் மீண்டு வரும் என்றும் நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில், Wunderbar films யூடியூப் சேனல் நேற்று காலை ஹேக் செய்யப்பட்ட நிலையில், இன்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் தனுஷின் ‘Wunderbar films’ தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

THANKS TO : DINAKARAN

Bala Trust

About Aruna Manoharan

Check Also

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES