
தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது விக்ரம் திரைப்படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து தயாரித்திருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
படத்தை அறிவித்த நாள் முதல் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் இப்படத்திலிருந்து பத்தல பத்தல எனும் பாடல் வெளியாகி செம ஹிட்டானது.
அனிருத் இசையில் கமல் எழுதி பாடியிருக்கும் இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விக்ரம் படத்தில் கமலுடன் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வந்தன.
இது சமூகத்தளங்களில் பேசும் பொருளாக மாறியது. அதைத்தொடர்ந்து சூர்யா மற்றும் விக்ரம் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யா இப்படத்தில் நடிப்பது உறுதிதான் என்று பேசிவந்தார். ஆனால் படக்குழுவிடமிருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யா இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதை உறுதி செய்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து சூர்யா இப்படத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் வருவாராம். படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரமாக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்குமென்றும், மேலும் சூர்யா படத்தில் பத்து நிமிடங்களுக்கு மேல் வருவார் என்றும் ஒரு தகவல் இணையத்தில் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
THANKS TO : SAMAYAM TAMIL