கரூர் மாவட்டம் குளித்தலையில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
நூறாண்டுகள் போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதராவாக திருத்தம் செய்யப்படுவதை கண்டித்தும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளான கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கான கட்டுப்படியான விலை தீர்மானிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்காக கொண்டுவந்த நூறு நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையிலான செயல்பாடுகளை கண்டித்தும், தொடர்ந்து தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்த மத்திய மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.இலக்குவன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் இரா.முத்துசெல்வன், சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி : ஜாகீர் உசேன்
படம் : சிவா