கரூர் மாவட்டம் குளித்தலை 06.9.2019
கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சியில் குளம் தூர்வாரும் பணி பூமி பூஜை விழா
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமபத்திரநாயக்கர் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜை விழா கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவினை துவக்கி வைத்தார். ரூபாய் 4.9 லட்சம் மதிப்பீட்டில் இந்த ராம பத்திர நாயக்கர் குளம் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுந்தரம், கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, வட்டாட்சியர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, வடச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் விஜயன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்க பிரதிநிதி துரை கவுண்டர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தி : சிவா மற்றும் ஜாகீர் உசேன்