Sunday , August 14 2022
Breaking News
Home / தமிழகம் / குளித்தலை பகுதியில் முதல்வர் குறை தீர்ப்பு முகாம் !!
Vsolve UK

குளித்தலை பகுதியில் முதல்வர் குறை தீர்ப்பு முகாம் !!

 

குளித்தலை ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்
குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பில்லூர், ஆர்.டி.மலை, புழுதேரி, மற்றும் நங்கவரம் பேரூராட்சியில் நச்சலூர், குறிச்சி பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.நங்கவரம் பேரூராட்சி நச்சலூரில் வட்டாச்சியர் செந்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜய் சங்கர் முன்னிலை வகித்தார். நங்கவரம் பேரூராட்சி குறிச்சி கிராமத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆர். டி. மலை, புழுதேரி கிராமத்தில் வட்டாச்சியர் செந்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் அரவிந்த், வரதராஜ், ராமதுரை, கருமாச்சலம், ஊராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தி : ஜாகீர் உசேன்

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES